வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (15:34 IST)

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஏமாற்று பேர்வழிகள்! – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் ஏமாற்று பேர்வழிகள் என பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபத்தில் தங்கள் ஊழியர்களை குறைப்பதற்காக கட்டாய ஓய்வை அமல்படுத்தியது. இதற்கு பலர் விண்ணப்பித்து ஓய்வூதியம் பெற்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் பெரும் கடன் சுமையால் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கர்நாடகாவின் கும்டா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பாஜக எம்.பி ஆனந்தகுமார் ஹெக்டே “பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மோசடி பேர்வழிகள். இவர்கள் மக்களறிந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சிறிதும் உழைப்பதில்லை. 88 ஆயிரம் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து விட்டு பி.எஸ்.என்.எல்-ஐ தனியார்மயமாக்கி விடலாம்” என கூறியுள்ளார்.