1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kumbakonam schools found corona cases

தஞ்சையை தொடர்ந்து கும்பகோணம் பள்ளியிலும் கொரோனா! – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Tamilnadu
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பள்ளியில் கொரோனா உறுதியான நிலையில் தற்போது கும்பகோணம் பள்ளி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்சமயம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முன்னதாக அம்மாப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 56 மாணவிகள், 1 ஆசிரியர், 9 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதியானது. அதை தொடர்ந்து ஆலங்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கொரோனா உறுதியாகியுள்ளது.தஞ்சாவூர் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தண்டவாளத்தில் குறுக்கே நின்ற மாடு… 35 கி.மீ பின்னோக்கி சென்ற ரயில்!