1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (16:08 IST)

கும்பகோணத்தில் தி்டீரென கடையடைப்பு போராட்டம்: காரணம் என்ன?

கும்பகோணத்தில் தி்டீரென கடையடைப்பு போராட்டம்: காரணம் என்ன?
கும்பகோணம் பகுதியில் உள்ள வணிகர்கள் திடீரென கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சுவாமிமலை வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து சுவாமிமலை வணிகர் சங்க தலைவர் சிவக்குமார் அவர்கள் கூறியபோது ’கும்பகோணம் மாநகராட்சி உடன் சுவாமிமலையை இணைக்க இருக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுவாமிமலை தனியாக பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார் 
 
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்