1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (15:29 IST)

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை
கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதும் இந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்த அன்று பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்த நினைவு நாளை பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் 
 
அதுமட்டுமின்றி பள்ளி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சியை தொடங்கியுள்ளதை அடுத்து இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.