1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (09:25 IST)

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 17 ஆம் ஆண்டு நினைவு தினம்

இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் தேதி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
 
அந்த வகையில் இன்றும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன் தங்களது குழந்தைகளின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.