1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (15:54 IST)

நான் அழகா இல்ல.. யாருக்கும் என்ன பிடிக்கல! – விபரீத முடிவு எடுத்த மாணவன்!

கும்பகோணத்தில் தான் அழகாக இல்லை என தாழ்வு மனப்பான்மையால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் அடுத்த பணகுடம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பூவேந்தன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். பூவேந்தன் அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

தான் அழகாக இல்லை என்றும், தன்னுடன் இளம்பெண்கள் பேசுவதில்லை என்றும் அடிக்கடி தனது நண்பர்களிடம் கூறி வருத்தமாக இருந்து வந்துள்ளான் பூவேந்தன். இந்த தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்திய மனசிதைவால் விரக்தியடைந்த பூவேந்தன் பணகுடம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். தகவலறிந்த போலீஸார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.