”அதிமுகவை நம்பி ஏமாந்தோம், இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை”.. கிருஷ்ணசாமி கறார்

Arun Prasath| Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (16:47 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ,ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளார். மேலும், அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம், தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளது, அதிமுகவுடனான மனக்கசப்பா? என கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :