அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிய திமுக..

Arun Prasath| Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (12:28 IST)
இந்தியாவில் பணக்கார மாநில கட்சிகள் பட்டியலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது திமுக.

ஆண்டுதோறும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களது சொத்து விவரங்களையும், வரவு செலவு கணக்குகளையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவேண்டும். அதன் சொத்து விவரங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த வருடம், 41 மாநில கட்சிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டன.

அவற்றில். தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக ரூ.189 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தில், ரூ.191 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்ற 2016-2017 ஆம் ஆண்டில் 187 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருந்த அதிமுக தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலாவது 583 கோடி ரூபாய், சொத்துக்களுடன் சமாஜ்வாதி கட்சி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :