ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் இருந்து வருகிறது.. அதனால்தான் சில நாட்களுக்கு முன்பு ஈரானில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது அதற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்தது. மேலும் மக்களை துன்பத்தினால் ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார். ஆனால் அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம் என ஈரான் அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது..
ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் கூறிவருகிறார்..
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் குவித்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய போவதில்லை என ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான படைத்தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை என பிரிட்டன் அரசு அறிவித்திருக்கிறது. ஈரானை தாக்குவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாக இருக்கும் என்பதால் அமெரிக்கன் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது..