கமலின் சண்டியர் பட தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு.. முடியாத பஞ்சாயத்து...
2004ம் வருடம் கமல், தயாரித்து, இயக்கி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் சண்டியர். ஆனால் கமல் அரிவாள் கலாச்சாரத்தை கையிலெடுக்கிறார் எனக்கூறி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என அவர்கள் கூறினார்கள். இதற்கு கமல் சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி இதை போராட்டமாக முன்னெடுத்தார். இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் கமல்ஹாசன். அரசு தன் பக்கம் நிற்கும் என கமல் நம்பினார். ஆனால், ஜெயலலிதாவோ தலைப்பை மாற்றி விடுங்களேன்.. எதற்கு பிரச்சனை? என சொல்லவே அந்த படத்திற்கு விருமாண்டி என தலைப்பு வைத்தார் கமல்.
இந்நிலையில்தான் 22 வருடங்கள் கழித்து அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்நிலையில், சண்டியர் தலைப்புக்கு மீண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சண்டியர் திரைப்படம் நிச்சயம் தொடங்கப்படக்கூடாது.. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கமல்ஹாசன் இருக்கிறார். எம்பியாக ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக அவர் செயல்படுகிறார். சண்டியர் படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நடத்த விடமாட்டோம். கமல் ஆணவத்தோடு சண்டியர் என தலைப்பு வைத்திருக்கிறார் என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அரசு ரீதியான ஆதரவு கமலுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.