1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamalhaasan angry about cbe periyar arivulagam

கோவை பெரியார் அறிவுலக ஊழல்.. போலி புத்தகங்களை போட்டு எரிச்சிடுங்க!.. கமல் கோபம்...

kamal
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் போலியான பல ஆயிரம் புத்தகங்களை அங்கே வைக்கப்பட்டுள்ளன. அதில், பல தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் பெருமாள் முருகன் இதை வெளியே கூறியதையடுத்து இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 300 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நூலத்தில் எவ்வளவு ஊழல் நடந்தது என விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார்,.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹான் ‘இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத்  திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெரியார் பேர வச்சி ஊழல்!.. திமுக இனி தலை நிமிராது - விஜய் அட்டாக்...