தொடர்புடைய செய்திகள்
- 151 எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள்.! 16 பேர் மீது பாலியல் புகார்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!!
- நடிகை மிமி சக்ரவர்த்திக்கு பாலியல் மிரட்டல்.! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.!!
- கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு.! முதலமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு..!!
- இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்ற கருத்தை நீக்கிய உச்சநீதிமன்றம்
- பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது! - மகாராஷ்டிராவில் மற்றுமொரு அதிர்ச்சி!
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன்.. தற்கொலைக்கு முயன்றாரா?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தலைமறைவான நிலையில் அவர் கோவையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை போலீசார்கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் என்றும், தலைமறைவாக இருந்த போதே தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சோதனையில் தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது என்றும், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
