கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!...
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்கு சென்றது..
கூட்டணி கட்சிகளையும் சேர்த்து திமுக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பல தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. குறிப்பாக சென்னை திமுகவின் கோட்டை என சொல்லப்பட்டு வந்த நிலையில் அங்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதிலும் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுடன் தோற்றுப்போனார்..
இதை திமுகவில் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதோடு ஸ்டாலினை தோற்கடித்த மகிழ்ச்சியில் உற்சாகத்தில் தனது இரண்டு கைகளையும் ஆட்டியவாறு வி.எஸ் பாபு செய்த மேனரிசம் தொடர்பான வீடியோ சமூக வலைகளில் வைரலானது. இந்நிலையில்தான் வி.எஸ் பாபு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..