தொடர்புடைய செய்திகள்
- ஓ.பன்னீர்செல்வம் எங்களை நீக்கியது காமெடி- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- அதிமுக அலுவலகம் சீல் வைப்பு: நீதிமன்றத்தின் உத்தரவு
- உறுப்பினர்களை நீக்கி விளையாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்?! – ஓபிஎஸ்ஸின் ஹிட்லிஸ்ட் 2!
- ஓ.பி.எஸ். மகன்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி
- அதிமுகவோட இணைய மாட்டோம்.. நீங்க இங்க வாங்க! – டிடிவி தினகரன்!
பொன்னையன் ஆடியோ ரிலீஸ் விவகாரம்: நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கம்!
பொன்னையன் ஆடியோ ரிலீஸ் விவகாரம்: நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கம்!
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன் ஆடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது
அந்த ஆடியோவில் அவர் ஈபிஎஸ் பணம் கொடுத்துதான் அதிமுக நிர்வாகிகளை தக்கவைத்துக் கொண்டு இருப்பதாக கூறி இருப்பதாக கூறப்பட்டது
ஆனால் அந்த ஆடியோவில் பேசியது தான் அல்ல என்று பொன்னையன் கூறினார். இந்த நிலையில் பொன்னையன் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுகவை சேர்ந்த கோலப்பன் என்பது குறிப்பிடத்தக்கது
தன்னுடன் பேசியது உண்மைதான் என்றும் ஆனால் அவரை ஏன் மாற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை என்றும் கோலப்பன் கூறியிருந்தார்
இந்த நிலையில் பொன்னையனுடன் பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோவை வெளியிட்ட நாஞ்சில் கோலப்பன் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இதுகுறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
