1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (17:44 IST)

அதிமுக அலுவலகம் சீல் வைப்பு: நீதிமன்றத்தின் உத்தரவு

court
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த வழக்கின் போது காவல்துறை தரப்பில் செய்த வாதம் வருமாறு:  தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை
 
பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம். எனவே சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
 
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.