வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (18:05 IST)

ஓ.பன்னீர்செல்வம் எங்களை நீக்கியது காமெடி- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இபிஎஸ் உள்ளிட்ட சிலரை கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவில் இருந்து  நீக்குவதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளது காமெடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

நீக்கி வைக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது அதிமுகவில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் இன்று ஓ.பன்னீர் செல்வம், இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், பொள்ளாட்சி ஜெயராமன் உள்ளிட்ட 44 பேரை  கட்சியில் இருந்து நீக்கினார்.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுகவில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமிக்குத்தான் உள்ளது. எங்களைக் கட்சியை விட்டு  பன்னீர்செல்வம் நீக்கியதை  காமெடியாகப் பார்க்கிறென். அவர் அதிமுகவில் உள்ளை . ,மற்ற கட்சிடியில் இணையலாம்  எனத் தெரிவித்துள்ளார்.