1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kodanadu case, turning point in investigation

கொடநாடு விவகாரம்: ஜாமீனில் உள்ள 8 பேர்களை விசாரிக்க முடிவு!

கொடநாடு
கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள 8 பேரையும் மீண்டும் அழைத்து விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த விசாரணையின் போது பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு ஏற்கனவே ஜாமினில் உள்ள 8 பேரை மீண்டும் அழைத்து விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொலைபேசி மூலம் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி ஆகிய எட்டு பேர்களை அழைக்கவிருப்பதாக கூறப்படுகிறது தற்போது ஜாமீனில் உள்ள எட்டு பேரும் கேரளாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; 5 நாட்களுக்கு கனமழை!