செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (16:48 IST)

ஜாமீனில் வெளிவந்த ரௌடி… வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கும்பல்!

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் ராமச்சந்திரன் என்பவர் வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சபாபதி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மேல் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இவர் சிறையில் இருந்துள்ளார். கடந்த் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் பிணையில் வெளியாகியுள்ளார். இந்நிலையில் வழக்கு சம்மந்தமாக அவர் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவரின் வீட்டுக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. அதைத் தடுக்க முயன்ற ராமச்சந்திரனின் தாயாருக்கும் கையில் வெட்டுப் பட்டுள்ளது.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக சொல்லி போலிஸார் 9 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.