கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் சொல்லியும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஒவ்வொருமுறையும் தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தியே கர்நாடகாவிலிருந்து தண்ணீரை பெற்று வருகிறது. தற்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கமுடியாது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறிவிட்டார். எனவே, உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும் என திமுக, பாமக போன்ற கட்சிகள் கூறிவருகிறது.
ஆனால், முதல்வர் விஜயோ கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்தின் தண்ணீர் தேவை பற்றி எடுத்து சொல்லி காவிரி நீரை பெற முடிவெடுத்தார். ஆனால், முதலில் விஜயை சந்திக்க சம்மதம் சொன்ன கர்நாடக முதல்வர் திடீரென இப்போது சந்திக்கவேண்டாம்.. அப்புறம் பார்ப்போம் என சொல்லிவிட்டார் டி.கே.சிவக்குமார். இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளதால் வேகமாக நிரம்பி வருகிறது. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படவுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகவில் மழை பெய்து அணைகள் நிரம்புவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.