1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jason sanjay says fake news are spreading

உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க!.. குடும்பம் பற்றி பேசும் ஜேசன் சஞ்சய்...

jason sanjay
நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் ஜோசப் விஜய். ஒருபக்கம் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். மேலும் விஜயின் மனைவி, மகன், மகள் இருவரும் அவருடன் இல்லை..

மகனும், மகளும் சென்னையிலும், மனைவி சங்கீதா லண்டனிலும் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு விஜய்க்கும் அவரின் குடும்பத்திற்கும் தற்போது எந்த தொடர்பும் கிடையாது எனவும் சொல்கிறார்கள். அதோடு, குடும்பத்துடன் விஜய் பேசுவதுல்லை எனவும் சொல்லப்படுகிறது.  ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு தனது தந்தை மீது எந்த கோபமும் இல்லை என்பது அவர் கொடுக்கும் பேட்டிகளில் தெரிகிறது.

ஊடகம் ஒன்றில் தனது குடும்பம் பற்றி வெளியாகும் செய்திகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜேசன் சஞ்சய் ‘என்னுடைய படம் மற்றும் குடும்பம் குறித்து இணையத்தில் வரும் கமெண்ட்ஸ்களை நான் படிப்பதுண்டு. அதில் என்னை ஊக்குவிக்கும் மற்றும் படைப்பு ரீதியான நல்ல கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் திரைப்படங்களை நாம் மக்களுக்காகவே உருவாக்குகிறோம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பற்றி எதுவும் தெரியாமலேயே சில கற்பனையாக பல கதைகளை எழுதுகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. யாரையும் திருப்திபடுத்த நான் விரும்பவில்லை. உண்மைதான் எப்போதும் வலிமையானது.. நான் உண்மையாக இருக்கும்போது மக்களும் அதை உணர்வார்கள். என் குடும்பத்தின் மீது மக்கள் காட்டும் அன்பை பார்த்து அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.. அந்த அன்பிற்கும், நம்பிக்கைக்கும் எப்போதும் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன்’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..