ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (11:45 IST)

ஊழலை மறைக்க ராஃபியா கொல்லப்பட்டாரா? – ஜோதிமணி எம்.பி சந்தேகம்!

ஊழலை மறைக்க ராஃபியா கொல்லப்பட்டாரா? – ஜோதிமணி எம்.பி சந்தேகம்!
டெல்லியில் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஃபியா கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டுமென ஜோதிமணி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி லாக்பத்நகர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ராஃபியா என்ற இளம்பெண் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ராஃபியாவை கொன்றவர்களை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனே தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆட்சியர் அலுவலக ஊழல் வெளியே தெரியாமல் இருக்க ராஃபியா கொல்லப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுவதாக எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.