வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (14:06 IST)

கொடநாட்டில் கொலை, கொள்ளையின் போது மிந்தடை ஏற்பட்டது எப்படி?

பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்தமான பங்களா கொடநாடில் உள்ளது. ஓய்வு நாட்களை ஜெயலலிதா அங்கு கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்தபிறகு அந்த பங்களா செக்யூரிட்டிகளால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொடநாடு பங்களாவில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த இரண்டு காவலர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து சில ஆவணங்களையும், பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதில் பங்களா காவலர் ஓம்பகதூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து போலீஸார் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், அப்பகுதியில் பேக்கரி வைத்திருந்த சயான் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் பிறகு சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், சயானும் விபத்து ஒன்றில் சிக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சமீபத்தில் ஜாமீன் பெற்ற சயான் விசாரணைக்கு மட்டும் ஆஜராகி வருகிறார்.
 
இதனிடையே பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவலை கோடநாடு எஸ்டேட் வாகன ஓட்டுநர் திவாகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள திடுக்கிடும் தகவல் பின்வருமாறு... 
 
கோடநாடு எஸ்டேட்டிற்கு எந்தச் சூழலிலும் மின்தடை எப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முக்கியமான நோக்கத்தில்தான் கோத்தகிரியில் இருந்து 17 கிலோ மீட்டர் வரை நிலத்திற்கடியில் மின்ஒயர்கள் பொறுத்தப்பட்டன.
 
மின்சாரம் கோடநாடு பங்களா வளாகம் உள்ளே இருக்கும் கோபுரத்துக்கு செல்கின்றது. ஆகையால் பங்களா உள்ளே இருக்ககூடிய யாரோ ஒருவர்தான் மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும், அல்லது கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு யாராவது வழிகாட்டியிருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.