1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. know how to vote in the election some tips

நாளைக்கு தேர்தல்!.. ஓட்டு எப்படி போடணும் தெரியுமா?.. வாங்க பார்ப்போம்!...

vote
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியான நாளை 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. வாக்களிப்பவர்கள் நாளை ஓட்டு போடுவதற்கு தயாராகி வருகிறார்கள்..

இந்த முறை 234 தொகுதிகளிலும் சேர்த்து 4023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதிகமான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் செய்து வருகின்றன. ஏற்கனவே கடந்த பல நாட்களாக தமிழகம் முழுதும் அரசியல் கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் தற்போது தமிழகத்தில் 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது..

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். SIR பணிகளுக்கு பின் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம் வாக்காளர்கள் மட்டுமே 1.21 கோடி பேர் இருக்கிறார்கள் மூத்த வாக்காளர்கள் அதாவது 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் 44.98 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 75,064  வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்..

எல்லாம் சரி வாக்களிப்பது எப்படி என்கிற விவரத்தை பார்ப்போம்:

முதலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீங்கள் வரிசையில் நிற்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் சென்றதும் அதிகாரி ஒருவர் உங்கள் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப்பை பரிசோதித்துவிட்டு உங்கள் பெயர் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை படிப்பார்.. அதை அங்கிருக்கும் வேட்பாளர் ஏஜெண்டுகள் சரிபார்த்துக் கொள்வார்கள்.

அங்கிருக்கும் மற்றொரு அதிகாரி உங்கள் விரலில் மையிட்டு உங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு ஸ்லிப் கொடுப்பார்..

மூன்றாவது அதிகாரி உங்கள் ஸ்லீப்பை வாங்கி பரிசோதிப்பார்.. அதன்பின் அங்கே வைக்கப்பட்டு இருக்கும் வாக்கு இயந்திரத்தில் வாக்களிக்க உங்களை அனுமதிப்பார்..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களுக்கு விருப்பமான சின்னத்தின் மீதுள்ள பட்டனை அழுத்த வேண்டும்.. அப்போது ஒரு பீப் ஒலி கேட்கும். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை விவிபேட் எந்திரம் உங்களுக்கு காட்டும்.

அவ்வளவுதான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள்.. உங்கள் ஜனநாயக கடமை முடிந்தது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
முதல்ல உங்க புள்ளைக்கு சொல்லிகொடுங்க!. அப்புறம் முட்டு கொடுங்க!.. எஸ்.ஏ.சி-க்கு கிளாஸ் எடுத்த சேரன்!...