செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2026 (18:25 IST)

நாளை 6 மணிக்கு மேல்!. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!..

eps stalin
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பிரிப்பது, பிரச்சாரம் செய்து போன்ற வேலைகளில் மும்முரம் காட்ட தொடங்கியது.

வழக்கமாக அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவும். ஆனால், தற்பொது விஜயின் தவெகவும் இந்த போட்டியில் இணைந்திருப்பதால் நான்குமுனை போட்டி நிலவுகிறது..

கடந்த பல நாட்களாகவே திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பல இடங்களுக்கும் இந்த பிரச்சாரம் செய்தார்கள்

இந்நிலையில்தான் நாளையோடு பிரச்சாரம் முடிவடைவதால் நாளை மாலை 6  மணிக்கு மேல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. மேலும், டிஜிட்டல் முறையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதோடு, வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும், பிரச்சார வாகனுங்களுக்கான அனுமதி நாளை மாலையிடும் ரத்து செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.