செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (10:43 IST)

கிஷோர் கே சாமி மீண்டும் கைது: ஜூலை 7 வரை காவலில் வைக்க உத்தரவு!

பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளியுமான கிஷோர் கே சாமி ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட மறைந்த தலைவர்களையும் முக ஸ்டாலின் உள்ளிட்ட தற்போதைய தலைவர்களையும் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கிஷோர் கே சாமி கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்
 
அதன்பின் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாகவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே நடிகை ரோகினி ஆன்லைன் மூலம் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்து உள்ளார் என்பதும் அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது