1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:44 IST)

தஞ்சையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம்! – இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவு!

தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் விரல் கவனக்குறைவாக துண்டிக்கப்பட்ட சம்பத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கையில் இருந்த ஊசியை அகற்ற முயன்றபோது கவனக்குறைவாக குழந்தையின் கட்டைவிரல் துண்டானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம் கட்டை விரலை மீண்டும் இணைக்கும் வகையிலான நவீன மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றவும், இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.