1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (11:03 IST)

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.. கூடுதல் அவகாசம் தேவை!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15க்குள் புதிதாக பிரிக்கப்பட்டு உருவான 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை எனவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் தனிஅலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.