செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (19:03 IST)

விவசாயி உயிரிழப்பு... இரண்டு போலீஸார் கைது...

விவசாயி உயிரிழப்பு... இரண்டு போலீஸார் கைது...
சேலம் மாவட்டத்தில் ஒரு விவசாயியை போலீஸார் லத்தியால் தாக்கினர். இதில் அவர் பலியானார். இந்த வழக்கில் இரு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன் பட்டியில் விவசாயி முருகேசனைத்  சாலையில் வைத்துத் தாக்கியதாக  காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  விவசாயி முருகனைத்  தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விவசாயி முருகேசனைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.