1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. doctor ramadoss announce about alliance today

தவெகவா? தனித்துப்போட்டியா?.. யாருடன் கூட்டணி?!.. இன்று அறிவிக்கும் டாக்டர் ராமதாஸ்?..

ramadoss
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகின்றன.. தொகுதி பங்கீடு அமைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்வது, பொதுக்கூட்டம் போடுவது, பிரச்சாரம் செய்வது, தேர்தலுக்கான வியூகத்தை அமைப்பது என நடவடிக்கைகள் சூடு பிடித்திருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 95 சதவீதமான கட்சிகள் அதிமுக, திமுக என கூட்டணிகளை அமைத்துவிட்டன. இதில் ராமதாஸ் தலைமையிலான பாமக மட்டுமே இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது.

பாமக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது அதில் அன்புமணி தலைமையிலான பாமக ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. எனவே ராமதாஸ் அந்த கூட்டணிக்கு செல்ல முடியாது. அதேபோல் திமுகவில் விடுதலை சிறுத்தை இருப்பதால் அந்த கட்சிக்கும் செல்ல முடியாது.. எனவே ராமதாஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை..

இந்நிலையில்தான், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி விவாதிக்க வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு ராமதாஸின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
. அனேகமாக இந்த கூட்டம் முடிந்தபின் கூட்டணியா இல்லை தனித்துப் போட்டியா என ராமதாஸ் அறிவிப்பார் என தெரிகிறது..
அடுத்த கட்டுரையில்
இலவச தேர்தல் வாக்குறுதிகளுக்கு தடை வருமா?.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!...