ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (00:01 IST)

ஐஸ்கிரீம் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய குழந்தைகள் பலி!

ஐஸ்கிரீம் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன் கூடு என்ற கிராமத்தில் வசிப்பவர்  நாகாஜூசிக்க. இவரது மனைவி தேவம்மா. இந்த தம்பதியர்க்கு பாக்யா(12) என்ற மகளும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜாகவுரம்மா என்பவரிம் காவ்யா(7)  என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகே வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பார்லர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் தங்களைக் கண்டுபிடிக்கக் கூடாது என இருவரும் அந்த ஐஸ்கிரீம் வைக்கும் குளிர்சாதன பெட்டிக்குள் மறைந்திருந்தனர். அப்பெட்டி பூட்டிக்கொண்டதால், 2 பேரும் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.  பின்னர் மற்ற குழந்தைகள் காவ்யா,பாக்யாவை காணவில்லை என பெற்றோரிடம் கூறிய நிலையில், அந்தப் ஐஸ்கிரீம் பெட்டியை திறந்தபோது,இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.