தொடர்புடைய செய்திகள்
- பீஸ்ட் படத்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கடிதம்
- ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
- மாநாடு ரிலிஸ் அப்டேட் எப்போது? தயாரிப்பாளர் அளித்த பதில்!
- 68 நாளில் சிம்புவை வைத்து படத்தை முடித்த வெங்கட்பிரபு!
- மாநாடு படத்துக்கு பூசனிக்காய் உடைக்க தயாரான படக்குழு!
மே 2ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்
மே 2ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''
இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
