செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:59 IST)

உத்தர பிரதேசத்தை உலுக்கும் மர்ம காய்ச்சல்! – ஒரு வாரத்தில் 32 குழந்தைகள் பலி!

உத்தர பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தின் ஃபிரோசாபாத் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஆய்வு செய்த மருத்துவர்கள் மர்ம காய்ச்சலின் அறிகுறி டெங்கு அறிகுறிகளோடு ஒத்திருப்பதால் டெங்கு காய்ச்சல் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.  மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபிரோசாபாத் பகுதியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.