1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karunanithi poster viral in Madurai

”நான் அண்ணாகிட்ட போறேன்னு சொல்லு” – மதுரையில் வைரலாகும் கருணாநிதி நினைவு தின போஸ்டர்!

Tamilnadu
எதிர்வரும் ஆகஸ்டு 7 முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் வர உள்ள நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு தினம் ஆகஸ்டு 7 அன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி கருணாநிதி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமான செயல்பாடுகளை மேற்கொள்ள திமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் திமுக உறுப்பினர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டரில் “தம்பி ஸ்டாலின்! உடன்பிறப்புகள் யாராவது வந்து கேட்டால் நான் அண்ணாகிட்ட போகிறேன் என சொல்லிவிடு” என்று கருணாநிதி சொல்வது போல வாசகம் தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 3ஆவது அலை வரும்: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி