செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (12:40 IST)

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்று, நாளையும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.