வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (14:20 IST)

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!

karthick gopinath
பிரபல யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவிலில் திருப்பணிகள் முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி கோபிநாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் பாஜகவின் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அறிவாலயம் அரசுக்கு மேலும் ஒரு தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார்