திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (16:59 IST)

கோவில் திருப்பணிக்கு பணம் வசூலித்த விவகாரம்: கார்த்திக் கோபிநாத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

karthick gopinath
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையும் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.