ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (22:48 IST)

விடாது துரத்திய காவல் ஆய்வாளர் முத்துக்குமார்... ஜாமின் ரத்து நீதியரசர் வழங்கிய பின்பு சாட்டை துரைமுருகன் அதிரடி கைது ?

muthukumar
ஐஜி கொடுத்த அசைன்மெண்ட் விடாது துரத்திய காவல் ஆய்வாளர் முத்துக்குமார் 6 மாத காலத்திற்கு பின்பு ஜாமின் ரத்து நீதியரசர் வழங்கிய பின்பு சாட்டை துரைமுருகன் அதிரடி கைது ?
 
முதல்வர் மற்றும் மூத்த திமுக தலைவர்களையும், அமைச்சர் செந்தில்பாலாஜி தரக்குறைவாக பேசிய சாட்டை துரைமுருகன் – ஜாமின் கிடைக்காமல் செய்த அதிரடி காவல் ஆய்வாளர் முத்துக்குமார்
 
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம், திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரின் கீழ், மறைந்த முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த சாட்டை துரைமுருகன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு 559/21 ன் கீழ் 153 (A), 504, 505 (1), 505 (b) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் R/W 67 of It act வழக்கு பதிவு செய்து, கடந்த வருடம் 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் 16 ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி ஜாமினில் விடுதலை சாட்டை துரைமுருகன், தஞ்சாவூர் சைபர் க்ரைமில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்த 19/21 ன் கீழ் 153, 504, 505 (1) (b), 505 (2), 67 it act ஆகிய இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ், கைது செய்யப்பட்ட நிலையில், அதே 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பொதுக்கூட்டத்தில் சீமானை ஆதரித்து பேசிய சாட்டைமுருகன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்ததோடு, காங்கிரஸ் கட்சியினையும் தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். இந்நிலையில்., தக்கலை காவல்நிலையத்தில் 710/21, 143, 153, 153 (A), 505 (1) (b), 505 (2), 506 (1), 269 67 It act மற்றும் epidemic disease act 1987 மற்றும் 67 IT act பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது கரூர் சைபர் க்ரைமில் செந்தில்பாலாஜியினை தரக்குறைவாக விமர்சித்த சாட்டை துரைமுருகன் மீது கரூர் சைபர் க்ரைமில் குற்ற எண் 2/21 ன் கீழ் 153, 505 (1), 505 (b) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், ஜாமினில் வெளி வந்த சாட்டை துரைமுருகன், திருவள்ளூர் மாவட்டம்,போக்ஸ்கான் என்கின்ற செல்போன் கம்பெனியில்., உள்ள ஹாஸ்டல், புட் பாய்ஸனில் வாமிட் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இறந்து விட்டதாக அவரது youtube பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்நிலையில், திருவள்ளூர் தாலுக்கா குற்ற எண் 631/21 ன் 143, 153, 153 (A), 505 (2), 506 (1), 509, 124 (A) இந்திய தண்டனை சட்டம் பிரிவுகளின் கீழ், EPIDIMIC DESEASE ACT 1987 & 54the deasiese management management act ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டும், பின் ஜாமினில் வெளி வந்த நிலையில், தற்போதைய தமிழக அரசு பற்றியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இவருடைய ஜாமினை ரத்து செய்வதற்காக, மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்திரவின் கீழ், காவல்துறை துணை தலைவர் தஞ்சாவூர் கயல்விழி மேற்பார்வையின் கீழ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா புனேனி அவர்களின் உத்திரவின் கீழ் திருப்பனந்தாள் காவல்நிலைய ஆய்வாளர் முத்துக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமின் ரத்து செய்வதற்காக கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25 ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அரசு வழக்கறிஞரும்., சாட்டை துரைமுருகனின் வழக்கறிஞரும் வாதிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆய்வாளர் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் கடந்த 6 மாத காலமாக நடந்து வந்த நிலையில், இன்று நீதியரசர் புகழேந்தி, சாட்டைதுரைமுருகனின் ஜாமினை ரத்து செய்து உத்திரவிட்டார். இந்நிலையில்., குற்றவாளி சாட்டை துரைமுருகன் தற்போது கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் விரைவில் கைது செய்யப்பட்டு நிரந்தரமாக சிறையில் உள்ள நிலை வரப்போகுது என்பது கூடுதல் தகவல் ஆகும், மேலும், காவல்துறை ஸ்ட்ரைட் பார்வர்டு என்று கூறி வரும் நிலையில், மத்திய மண்டல ஐ ஜியின் அதிரடி ஜாமின் ரத்துவிற்காக கடந்த 6 மாத காலமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், போராடி ஜாமின் ரத்துவிற்காகவும், தற்போதைய தமிழக அரசினையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இனி இழிவுபடுத்த கூடாது என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் இழிவுபடுத்த கூடாது என்று,  செந்தில்பாலாஜியின்  அதிரடி மாஸ்டர் பிளானாக தான் இருக்குமோ என்கின்றனர்