1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (16:42 IST)

உபி பாஜக அலுவலகத்திற்கு மிரட்ட விடுத்த தமிழக இளைஞர்: போலீஸார் விசாரணை

BJP
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்திற்கு தமிழக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் திருகோகர்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த லக்னோ காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர் 
 
விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும். உத்தரப் பிரதேசம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக இளைஞர் மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது