கார்த்திக் சிதம்பரம் சொத்துக்கள் திடீர் முடக்கம்: காங்கிரஸ் அதிர்ச்சி
சிவகங்கை மக்களவை தொகுதியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஒதுக்கியபோது காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் இருப்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பா? என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் சொத்துகள் முடக்கப்பட்டதை அவருக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்வார்கள் என்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எளிதாக வெற்றி பெரும் தொகுதிகளில் ஒன்றாக சிவகங்கை இருந்த நிலையில் சரியான வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருக்க வேண்டும் என்பதே அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.