சட்டமன்ற தேர்தல் எதிரொலி: முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த திட்டமா?
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்தப் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் இத்தேர்வுகளை, வரும் ஆண்டில் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள்ளேயே நடத்தி முடிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்குவதால் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதாலும், பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் முன்பே மாணவர்களுக்கு தேர்வுகளை முடித்துவிட்டு விடுமுறை அளிக்க அரசு முற்படுகிறது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எவ்வித தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான தேர்வு கால அட்டவணை விரைவில் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும்.
Edited by Siva