காங்கிரஸில் இணைந்த கமல் பட நாயகி!

Last Modified புதன், 27 மார்ச் 2019 (22:49 IST)
தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிரபல தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணைந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். இவர் 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் தேர்தலில் ஊர்மிளா டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் அக்கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் கட்சியில் இணைந்தவுடன் ராகுல்காந்தியை சந்தித்து ஊர்மிளா வாழ்த்து பெற்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :