கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரச்சாரம் !!

KARUR
C.ANANDAKUMAR| Last Updated: புதன், 27 மார்ச் 2019 (21:13 IST)
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டி கிரமாத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஆண்டவன் மீது ஆணையாக கட்டி தருவேன் என்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தார். 
கரூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் அடுத்துள்ள பட்டாளம்மன், முத்தாளம்மன் ஆலயத்தில் இறைவழிபாட்டுடன் பிரச்சாரத்தை துவக்கினார். மேலும் கடந்த வாரம் தான் இதே கோயிலுக்கு அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரையும் சாமிகும்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி பொது மக்கள் மத்தியில் பேசும் போது கோடங்கிபட்டி கிராமத்திற்கு ஜோதிமணியை வெற்றி பெற்றால் நிச்சயம் மே்பாலம் அமைத்து தரப்படும்.
 
நான் மாநில நெடுஞ்சாலைய என்றால் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பாலத்தை கட்டியிருப்பேன் தேசிய நெடுஞ்சாலை என்பதால் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்,  என்றும் மேலும் ஜோதிமணி வெற்றி பெற்றால் விவசாய கடன், கல்வி கடன், காஸ் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் என்று பேசினார்.
 
கரூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி பேசம் போது ராகுல்காந்தி கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் கடந்த பத்தாண்டு காலம் பதவியில் இருந்து மு.தம்பிதுரை இது வரை தங்களுக்கு என்ன செய்தார் என்றும், நான் வெற்றி பெற்றால் நிச்சயம் கோடங்கிப்பட்டிக்கு மேம்பாலம்  கட்டிதருவேன் என்று பேசினார். பிரச்சாரம் துவக்க நாளான இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :