1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (19:18 IST)

த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில்  இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது.
 
இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்