நடிகைக்கு மட்டும் வந்த உடனே சீட்டா ? காங்கிரஸ் தொண்டர்கள் கோபம்!!!

congress
Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (18:17 IST)
பிரபல அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட அடிமட்டத் தொண்டன் நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கு. ஆனால் பிரபலங்கள் என்னும் பெயரில் சினிமாத்துரையில் இருப்பவர்களுக்கு கட்சியின் தலைமையே தேடிசென்று சீட் கொடுப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது. 

வாரிசுகளும் ஒருபுறம் களத்தில் குதித்துள்ளனர். அதனால் அரசியலில் அடி மட்டத்தொண்டன் இனி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
 
அதே போல பிரபல ஹிந்தி நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் 27 அன்று காங்கிரஸில் இணைந்தார். அதற்குள்ளாக இவர் மும்பை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பீட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதுபற்றி ஊர்மிளா கூறியதாவது :
 
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் அதன் நிலைப்பாட்டில் எனக்கு நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்தேன். தேர்தலுக்காக இணையவில்லை என்று ஊர்மிளா தெரிவித்தார்.
 
இதே போல கடந்த காலங்களிலும் சினிமா பிரபலங்கள் என்பதால் கட்சிக்கு வாக்குகள் குவியும் என்பதால் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றாலும் கூட கட்சியில் இணைந்து வலிய தொகுதியை ஒதுக்கிப் போட்டியிடச் செய்வதற்கு உட்கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :