1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (13:13 IST)

வடகலையா? தென்கலையா? பிரபந்தம் பாடுவதில் மோதல்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Kanchipuram
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை இடையே மோதல் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அலங்காரங்களும், வீதி உலாக்களும் நடந்து வருகின்றன. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி வரதராஜபெருமாள் பாலாற்று பகுதியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது சுவாமி முன்பு வேதங்கள், பிரபந்தங்கள் பாடுவது யார் என்பதில் வடகலை மற்றும் தென்கலை அய்யங்கார் பிரிவினரிடையே மோதல் எழுந்தது. இதனால் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.