1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (10:06 IST)

ஹாட்ரிக் விக்கெட்… ஒரே ஓவரில் மொத்த மேட்ச்சையும் மாற்றிய சஹால்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 103 ரன்களும், படிக்கல் 24 , சாம்சன் 38 ரன்களும், ஹெட்மர் 26 ரன்களும், எடுத்து அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்த கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக தொடங்கி வெற்றியை நோக்கி சென்றது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் சேர்த்தார். ஆனால் சஹால் வீசிய 17 ஆவது ஓவரில் ஸ்ரேயாஸ் விக்கெட் உள்ளிட்ட மொத்தம் நான்கு விக்கெட்களை வீழ்த்தி போட்டியின் போக்கையே மாற்றினார். அதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.