1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin allot fund for education development

படிப்பை மட்டும் யாராலயும் திருட முடியாது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Mk Stalin
தமிழக பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி தற்போது தமிழக அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “யாராலும் திருட முடியாத சொத்து உங்கள் கல்வி. பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
எனக்கு சொந்த வீடே இல்ல… உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி தகவல்!