வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:09 IST)

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்…. ரெண்டுமே நாங்கதான் – சஹால் பகிர்ந்த வைரல் புகைப்படம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரு வீரர்கள் ஆரஞ்ச் கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டையும் தக்கவைத்துள்ளனர்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 103 ரன்களும், படிக்கல் 24 , சாம்சன் 38 ரன்களும், ஹெட்மர் 26 ரன்களும், எடுத்து அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்த கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக தொடங்கி வெற்றியை நோக்கி சென்றது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் சேர்த்தார். ஆனால் சஹால் வீசிய 17 ஆவது ஓவரில் ஸ்ரேயாஸ் விக்கெட் உள்ளிட்ட மொத்தம் நான்கு விக்கெட்களை வீழ்த்தி போட்டியின் போக்கையே மாற்றினார். அதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பட்லர் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்ச் கேப்பையும், சஹால் அதிக விக்கெட்கள் எடுத்ததற்கான பர்ப்பிள் கேப்பையும் பெற்றுள்ளனர். இது சம்மந்தமாக சஹால் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.