வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:28 IST)

தமிழக ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – 150 பேர் கைது!

இன்று மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுனருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த 150க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக இன்று காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுனர் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுனர் செல்லும் வழியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுனர் செல்லும் வழியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.