1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Political Strategist Prashant Kishor Moves to Ashram, Slams Nitish Kumar Over Dynasty Politics and Luxury Living

அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை ஆசிரமம் தான்: பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவு...!

பிரசாந்த் கிஷோர்
இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள 'பீகார் நவ்நிர்மாண்' ஆசிரமத்திற்கு தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்றியுள்ளார். தர்பங்கா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் அடுத்த சட்டமன்றத் தேர்தல்  வரை தான் ஆசிரமத்திலேயே தங்கி மக்கள் பணியாற்ற போவதாக தெரிவித்துள்ளார்.
 
அரசியல் வாரிசுரிமை மற்றும் மாநிலத்தின் வறுமை நிலை குறித்து பேசிய அவர், பீகாரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க முடியாத முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். மேலும், நிதிஷ் குமார் டெல்லி செல்வதற்கு முன்பாக தன் மகன் நிஷாந்த் குமாரை மாநில அமைச்சரவையில் அமர்த்தி வாரிசு அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார் என்றும் சாடினார்.
 
பீகார் நாட்டின் மிக ஏழ்மையான மாநிலமாக இருக்கும் சூழலில், அதன் முதல்வர் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட இல்லத்தில் வசிப்பது தேவையற்ற ஆடம்பரம் என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, பீகார் மக்கள் சாதி, மதம் அல்லது வெறும் 10,000 ரூபாய்க்காக தங்களின் வாக்குகளை விற்காமல், தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, உண்மை நிலையை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் இன்னொரு மர்ம மரணம்..!